Monday, May 11, 2015

அலைபேசியை அறிவை வளர்க்கப் பயன்படுத்துங்கள்..

smartphoneஏறக்குறைய தமிழக மக்களில் 90 சதவிகிதம் பேர் பயன்படுத்தும் தொழில் நுட்ப சாதனம் என்ன என்று வினா எழுப்பினால் அதன் விடை அலைபேசி என்பதாகவே இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் அலைபேசிகளின் உற்பத்தி, பயன்பாடு, விற்பனை அலைபேசி சார்ந்த சேவைகள் பயன்பாடு அவற்றால் ஏற்படும் வேலைவாய்ப்புகள் போன்றவை விண்ணளவு உயர்ந்துள்ளன. பதின் வயது இளைஞர்களில் தொடங்கி மூத்த குடிமக்கள் வரை அலைபேசி இல்லாமல் இன்று எவரும் வாழ்வதில்லை. நமது உடலின் ஓர் அங்கம் போல் ஆகிவிட்ட அலைபேசியை நாம் நமது அறிவை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை என்பதே விடை.
பெரும்பாலும் அலைபேசிகள் பேசுவதற்கும் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக smart phone வகை அலைபேசிகள் அனைவரது கைகளிலும் தவழ்கின்றன. இத்தகைய அலைபேசிகள் ஒரு சிறிய கணிணியைப்போல் செயல்பட வல்லவை. ஏராளமான வசதிகளையும் செயலிகளையும்(Apps) உள்ளடக்கியவை. தகவல் தொழில் நுட்பத் துறையில் பல்லாயிரம் பேர் இத்தகைய அலைபேசிகளுக்கான மென்பொருட்களையும் செயலிகளையும் (Apps) தயாரித்து விற்பனை செய்கின்றனர். வங்கிகள் அரசு நிறுவனங்கள் போன்றவை இந்த அலைபேசிகள் மூலம் தங்களது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கிடையே கொண்டு சேர்க்கின்றன.
alaipesi1இத்தகைய ஆற்றல் வாய்ந்த சாதனத்தை நமது மக்கள் எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் பாடல்களை கேட்கவும், காணொளிகளை பார்ப்பதற்கும் முகநூல் பார்ப்பதற்கும் காணொளி விளையாட்டுகளை விளையாடுவதற்கும் பயன்படுத்துகின்றனர். அறிவை வளர்க்கும் விதமாக பயன்படுத்துவோர் பத்து சதவிகிதம் கூட இருப்பதில்லை.
அலைபெசியைக் (Smart Phone) கொண்டு நாம் எவ்வாறு அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்? நாம் அழுத்தமாக புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று என்னவென்றால் இவ்வகை அலைபேசிகள் நம் கைகளில் தவழும் நூலகங்கள் ஆகும். மின் புத்தகங்கள் எனப்படும் அறிவுப் புதையல்கள் இவற்றில் கொட்டிக்கிடக்கின்றன. நல்ல ஒரு நினைவுத் திறன் (Memory Card) கொண்ட அலைபேசி நூற்றுக்கணக்கான நூல்களை தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ள இயலும்.
அத்தகைய புத்தகங்களை வாசிக்க ஏராளமான செயலிகள் (Apps) இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. எண்ணிலடங்காத மின் புத்தகங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. அவற்றை தரவிறக்கம் செய்து படித்தால் நமது அறிவு வளரும் என்பதில் ஐயமில்லை.
மின் புத்தகங்கள் epub, mobi, pdf போன்ற வடிவங்களில் அமைகின்றன. android, ios வகை அலைபேசிகளில் ஏரளமான செயலிகள் இந்த வகை புத்தகங்களை படிக்க உருவாக்கப்பட்டுள்ளன. kindle எனப்படும் அமேசான் நிறுவனத்தின் மென்பொருளும் புத்தகங்கள் படிப்பதை மிக எளிமையாக்குகிறது.
Mobile-phoneவசதிகள் ஏராளமாக இருந்தாலும் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் நமது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சாதனைகள் நிகழும். நெடுந்தூர தொடர்வண்டிப் பயணங்களின் போது தமிழ் நாட்டில் புத்தகம் படிப்பவர்களையே காண முடியாது. தூங்குவது, அலைபேசியில் பேசுவது, சும்மா இருப்பது போன்ற செயல்களிலேயே நாம் பொழுதை வீணடிக்கிறோம். அந்த நேரத்தில் மின் புத்தகங்களை வாங்கி அலைபேசியில் சேமித்து, படித்து வந்தால் கிடைக்கும் பலன் அளப்பரியது. அதுமட்டுமின்றி பேருந்து, தொடர்வண்டி, மருத்துவமனை, பள்ளிக்கூடம், அரசு நிறுவனங்கள் போன்ற இடங்களில் காத்திருக்கும் போது அலைபேசியின் மூலம் புத்தகம் படித்ததால் பலன் உண்டாகும். அலைபேசி என்பது எப்பொழுதும் நம்முடன் இருக்கும் சாதனம் என்பதால் புத்தகத்தை தூக்கிச்செல்லும் தொல்லையும் நமக்கு இல்லை. எனவே அறிவை வளர்க்க அலைபேசியை பயன்படுத்துவோம், ஏற்றம் பெறுவோம்.

Sunday, May 10, 2015

இணையத்தில் சந்தைப்படுத்தல் (Digital Marketing) என்றால் என்ன?

digitalmarketing2இன்றைய உலகம் இணைய மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் மின்னணு சாதனங்கள் வாயிலாக இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றனர். புறவுலகின் பல்வேறு விளம்பர சாதனங்களை இணைய உலகம் கொண்டுள்ளது. எந்தவொரு விடயத்தையும் தேடவேண்டுமெனில் இருந்த இடத்தில் இருந்தபடியே இணையத்தில் தேடுவதை முதன்மைச் செயலாக மக்கள் செய்கின்றனர். தனி நபர்களில் இருந்து நிறுவனங்கள் வரை இணைய அடையாளம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மின்னஞ்சல் கணக்குகள் தொடங்கி சமூக வளைதள இருப்பு, இணையதளங்கள் என்று பல்வேறு வழிகளின் வாயிலாக நமக்கு இணைய அடையாளங்கள் ஏற்படுகின்றன. தகவல் பரிமாற்றம் மற்றும் செய்தித் தொடர்பு என்ற அளவில் துவங்கிய இணைய உலகமானது இன்று மிகப்பெரிய அளவில் வணிகமயமாகியிருக்கிறது. இணையவழி வியாபாரம் மூலைமுடுக்குளில் கூட பிரபலமாகி செயல்பட்டு வருகிறது. இந்தியா போன்ற நெருக்கடி மிகுந்த நாடுகளில் போக்குவரத்துத் தொல்லைகள் காரணமாக மக்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலிருந்தே இணையம் மூலமாக பொருட்களை வாங்குதல், சேவைகளைப் பெறுதல் போன்ற வேலைகளை செய்ய விரும்புகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வியாபார நிறுவனங்கள் இணையத்தில் தங்களுடைய அடையாளங்களை ஏற்படுத்தி சந்தைப்படுத்துதலை நிர்மானித்தல் மிகவும் அவசியமான ஒன்றாகிவிடுகிறது. சந்தைப்படுத்துவது எப்படி, என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்று காண்போம்.
இணையத்தில் சந்தைப்படுத்துவதற்கு இணையதளம் இருப்பது இன்றியமையாததாகும். ஒரு நிறுவனம் தனது பொருட்களையும் சேவைகளையும் சிறப்பான முறையில் இணையப்பக்கங்களில் இட்டு தேவையான படங்களை இணைத்து தொடர்பு எண்களை குறிப்பிட்டு காண்போர் கண்ணைக் கவரும் விதத்தில் இணையதளத்தை நிறுவி இருந்தால் சந்தைப்படுத்துதல் மிகவும் எளிதாகும். எனவே இணையதளத்தை உருவாக்கி பராமரித்து வருதல் மிகமிக முக்கியமான செயலாகும். அடுத்ததாக இணையத்தில் சந்தைப்படுத்துதலை இருவகையாகப் பிரிக்கலாம். வலிந்து ஒரு நபரிடம் நமது சேவைகளை தெரியப்படுத்துவது ஒருவகை, மற்றொன்று கூகுள் தேடுபொறியில் தேடுபவர்களை நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு(Blog) வரவழைப்பது. இவ்விரண்டு வகையிலும் சந்தைப்படுத்துவதற்கு உள்ள சில வழிமுறைகளைக் கீழே காண்போம்.
  • digitalmarketing6இணையம் தொடங்கிய காலத்தில் ஆரம்பித்து இன்று வரையிலும், தொடக்கத்தில் இருந்துவரும் மின்னஞ்சல் பரிமாற்றம் மிக முக்கியமான ஒரு சந்தைப்படுத்தும் சாதனமாகும். இணையத்தில் உலவும் அனைத்து நபர்களும் தவறாமல் மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்பார்கள். அந்தக் கணக்கிற்கு வரும் மின்னஞ்சல்களை பெரும்பாலானோர் தினசரி பார்வையிடுவார்கள். ஒரு நபரின் கையில் நேரடியாக கொடுக்கப்படும் தபாலுக்கு இணையானது மின்னஞ்சல் சேவை. அவ்வாறு உள்ள மின்னஞ்சல் முகவரிகளை ஆயிரக்கணக்கில் திரட்டி அவற்றுக்கு வியாபார நிறுவனங்களின் பொருட்களையோ, சேவைகளையோ தெளிவான படங்கள் மற்றும் சொற்கள் வாயிலாக விவரித்து மின்னஞ்சல்களை உருவாக்கி அனுப்பினால் ஏராளமான மக்களை நேரடியாக சென்றடைய முடியும். மின்னஞ்சல் மூலம் சந்தைப்படுத்துவதற்கு உதவி செய்ய பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மிக எளிமையாக இச்செயலை செய்யலாம். இது நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு வலிந்து தெரியப்படுத்தும் வகையாகும்.(Push Technique)
  • digitalmarketing3கூகுள் தேடுபொறி (Google Search) இயந்திரத்தை பயன்படுத்தாத மக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த சாதனம் பிரபலமானதாகும். ஒருவர் இந்த இயந்திரத்தில் தேடும் பொழுது அவருக்கு நமது தகவல்கள் சென்று சேரவேண்டுமாயின் S.E.Oஎன்னும் செயலை நுணுக்கமாகவும், நுட்பமாகவும் செய்யவேண்டியது முக்கியம். தேடும் பொழுது முதல் பக்கத்தில் வரும் விடைகளையே மக்கள் பார்க்கின்றனர். எனவே நமது இணையதளத்தை கூகுள் தேடுபொறியின் முதல் பக்கத்தில் கொண்டு வரும் காரியத்தை செவ்வனே செய்து முடிக்கவேண்டும். நிறைய நேரமும் பொறுமையும் தேவைப்படும் இதற்கு நல்ல நிபுணர்கள் தேவை. அவ்வாறு செய்துவிட்டால் இணையத்தில் தேடும் வாடிக்கைளார்களிடையே எந்தவொரு நிறுவனமும் தமது சேவைகளையும் பொருட்களையும் எளிதில் கொண்டு சேர்க்கலாம். இது நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு வரவழைக்கும் வகையாகும்.
  • digitalmarketing7சமூக வலைதளங்கள் எனப்படும் சாதனங்கள் இன்றைய நாளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் மூலமாக நண்பர்களிடையே தொடர்பு கொள்வதும், செய்திகளை பரிமாறிக்கொள்வதும் வெகு எளிதாக இன்று நடைபெறுகிறது. இத்தகைய சமூக வலைதள இணையதளங்கள் தமது வருமானத்திற்காக நிறுவனங்களை குறிவைத்து விளம்பர சேவைகளை தொடங்கியுள்ளனர். இந்தத் தளங்களில் நிறுவனங்கள் கணக்குகளைத் தொடங்கி தங்களைப் பற்றிய செய்திகள், படங்கள், காணொளிகள் போன்றவற்றைத் தொடர்ந்து ஏற்றிவந்தால் காண்போருக்கு நல்ல ஒரு தாக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். மேலும் பணம் கொடுத்து விளம்பரங்கள் செய்வதன் வாயிலாகவும் ஏராளமான மக்களை சென்றடையலாம். இது நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு வரவழைக்கும் வகையாகும்.
  • digitalmarketing4இணையதளங்கள் இருந்தபோதும்கூட பதிவுகள்(Blog) எனப்படும் சாதனங்கள் சந்தைப்படுத்துதலில் மிக முக்கியமானவையாகும். தினசரி செய்திகளை வெளியிட்டு பரிமாறிக்கொள்வதற்கு உகந்ததாக இருக்கக்கூடிய பதிவுகள் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. இத்தகைய பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு மக்களிடையே நமது பொருட்களைக் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த முடியும். இது நமது பதிவுத்தளத்திற்கு வரவழைக்கும் வகையாகும்.(Push Technique)
  • இணையத்தில் பல்வேறு சமூகக் குழுக்கள் வெவ்வேறு நிறுவனங்களில் இணையதளங்களுக்கு உள்ளாக செயல்படுகின்றன, இத்தகைய குழுக்களில் பல்வேறு நபர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவற்றின் சிறப்பு யாதெனில் வெளியிடப்படும் செய்திகள் உறுப்பினராக உள்ள அனைவருக்கும் சென்று சேருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குத் தொடர்பான குழுக்களில் செய்திகளையும் விளம்பரங்களையும் தொடர்ந்து வெளியிட்டால் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான பலன் கிட்டும். இது நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு வரவழைக்கும் வகையாகும்.(Groups Marketing)
  • digitalmarketing8இணைய உலகில் பல்வேறு நிறுவனங்கள் வரிவிளம்பரங்களுக்காகவே தளங்களை நடத்துகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை இலவச சேவைகளை அளிக்கின்றன. இத்தகைய இணையதளங்களில் நமது தயாரிப்புகளை சுருக்கமாக வெளியிட்டு அதனைப் பார்க்கும் மக்களிடையே நாம் சென்று சேரலாம். இது நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு வலிந்து தெரியப்படுத்தும் வகையாகும்.
இவையன்றியும் இன்னும் ஏராளமான வழிகள் சந்தைப்படுத்த உள்ளன. அவற்றை வரும் காலத்தில் நாம் அலசுவோம்.

முகநூல் விளம்பரம், சமூக ஊடகம் ஆகியவற்றினூடான சந்தைப்படுத்தல் (SEM) மற்றும் தேடல் பொறி மேம்படுத்தல் (SEO)  போன்ற, இணைய தள சேவைகளை உங்களுக்கு வழங்குகிறோம். 

தொடர்புக்கு : 

துளிர் மென்பொருள் நிறுவனம் ,

31 Aஜீவன் நகர்ஆதம்பாக்கம்,
சென்னை – 88.

+91 89391 08274  / info@thulirsoft.com 





Friday, May 8, 2015

மின் புத்தகங்கள் வாசிக்க உதவும் செயலிகள்(Apps)

ebook3
நமது இதழில் மின் புத்தகங்களை அலைபேசியை பயன்படுத்தி வாசிப்பதற்கு எளிமையான வழிகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். மின் புத்தகங்கள் epub, mobi, pdf போன்ற வடிவங்களில் அமைகின்றன. android, ios வகை அலைபேசிகளில் ஏரளமான செயலிகள் இந்த வகை புத்தகங்களை படிக்க உருவாக்கப்பட்டுள்ளன. இணையதளங்களில் மின் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை தரவிறக்கம் செய்து படிப்பதற்கு எதுவாக உருவாக்கப்பட்டுள்ள செயலிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

Aldiko Book Reader:

இந்த செயலி ios மற்றும்  android  தளங்களில் கிடைக்கிறது. ஆங்கிலப் புத்தகங்களை எளிமையாக இதன் மூலம் வாசிக்க முடிந்தாலும் தமிழில் வாசிப்பதற்கான வசதி இன்னும் செய்யப்படவில்லை.

Google Playbooks:

இந்த செயலியை google நிறுவனம் வழங்குகிறது. இதில் வெவ்வேறு வித வடிவங்களில் உள்ள மின் புத்தகங்களை எளிமையாக வாசிக்கலாம். இருந்த போதிலும் தமிழில் சில எழுத்துப் பிழைகள் தோன்றுகிறது.

Adobe Reader:

இந்த செயலியை adobe  என்ற நிறுவனம் வழங்குகிறது. இதில் pdf வடிவங்களில் உள்ள புத்தகங்களை எளிமையாக வாசிக்க முடியும்.

Ebook Reader:

இந்த செயலி ios மற்றும்  android  தளங்களில் கிடைக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களை இதன் மூலம் வாசிக்க முடியும்.

PDF Reader:

இந்த செயலியை android-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் pdf வடிவங்களில் உள்ள புத்தகங்களை எளிமையாக வாசிக்க முடியும். இருந்த போதிலும் உங்களுடைய அலைபேசி சிறியதாக இருந்தால் படிப்பதற்கு சற்றே கடினமாக இருக்கும்.

Amazon Kindle:

இந்த செயலியை amazon  என்ற நிறுவனம் வழங்குகிறது. இதில் mobi வடிவங்களில் உள்ள புத்தகங்களை எளிமையாக வாசிக்க முடியும். இந்த செயலி ios மற்றும்  android  தளங்களில் கிடைக்கிறது.

Thursday, May 7, 2015

Android செயலிகள்(Apps) வாயிலாக குழந்தைகளுக்கான மின் புத்தகங்கள்


ebooks5அலைபேசி வாயிலாக பல்வேறு தமிழ் நூல்கள் செயலிகளுள் பொதியப்பட்டு இருப்பதையும், அவற்றை எவ்வாறு நேரடியாக தரவிறக்கம் செய்து படிக்கலாம் என்பதையும், அதில் உள்ள சில முக்கியமான நூல்களையும் சென்றவாரம் பார்த்தோம். இந்த வாரம் குழந்தைகளுக்கான சிறுகதைகள், விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள் பற்றிய புத்தகங்களைப் பெறுவதற்கான இணைய சுட்டிகளை கீழே தொகுத்துள்ளோம். இவற்றை இணைய இணைப்பு கொண்ட அலைபேசியிலிருந்து நேரடியாக தரவிறக்கம் செய்து தங்களது குழந்தைகளுக்கு உறங்குவதற்கு முன்போ விடுமுறை நாட்களிலோ படித்துக்காட்டி மகிழ்விக்கலாம்.
குழந்தைகளுக்கான மின் புத்தகங்கள்:
ebooks1
  • தெனாலிராமன் கதைகளைக் காண https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.thenaliraman ஐ சொடுக்கவும்.
  • முல்லா கதைகளைக் காண https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.mulla ஐ சொடுக்கவும்.
  • விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள் காண https://play.google.com/store/apps/details?id=com.handheldapplication.yosi ஐ சொடுக்கவும்.
  • பஞ்சதந்திர கதைகளைக் காண https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.pancha ஐ சொடுக்கவும்.
  • மாயாவி கதைகளைக் காண https://play.google.com/store/apps/details?id=com.wmayavi ஐ சொடுக்கவும்.
  • சிறு கதைகளைக் காண https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.kids.story.book ஐ சொடுக்கவும்.
  • சிறு கதைகளைக் காண https://play.google.com/store/apps/details?id=com.udhay.tamilnightstories ஐ சொடுக்கவும்.
தொடர்புக்கு : 

துளிர் மென்பொருள் நிறுவனம் ,

31 Aஜீவன் நகர்ஆதம்பாக்கம்,
சென்னை – 88.

+91 89391 08274

info@thulirsoft.com









Wednesday, May 6, 2015

மின் புத்தகங்கள் வாசிப்போம் Android செயலிகள்(Apps) வாயிலாக

ebooks3

அலைபேசி வாயிலாக நூல்களை வாசிக்க முடியும் என்பதையும் அந்தப் பழக்கம் தமிழகத்தில் பரவி வருகிறது என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அலைபேசிகள்(Smart phones) பெரும்பாலும் இரண்டு வகை இயங்கு தளங்கள் வழியாக செயல்படுகின்றன. ஒன்று Android, மற்றொன்று IOS. தமிழகத்தில் Android வகை அலைபேசிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை அலைபேசிகளில் ஏராளமான செயலிகள்(Apps) உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது பல்வேறு தமிழ் நூல்கள் செயலிகளுள் பொதியப்பட்டு play.google.com என்ற தளத்தில் கிடைக்கின்றன. அவற்றுள் சில முக்கியமான நூல்களையும் அவற்றைப் பெறுவதற்கான இணைய சுட்டிகளையும் கீழே தொகுத்துள்ளோம். இவற்றை இணைய இணைப்பு கொண்ட அலைபேசியிலிருந்து நேரடியாக தரவிறக்கி வாசிக்க ஆரம்பிக்கலாம். தரவிறக்கம் செய்யும் பொழுது மட்டும் இணைய இணைப்பு இருந்தால் போதும். அதன் பிறகு விரும்பும் நேரத்தில் புத்தகத்தை வாசிப்பது போலவே இவற்றையும் வாசிக்கலாம். நீங்கள் பயணம் செய்யும் பொழுதோ, காத்திருக்கும் நேரங்களிலோ, உறங்குவதற்கு முன்போ அலைபேசியில் உள்ள இந்த நூல் செயலிகளை படித்து மகிழலாம்.
ebooks2
-தொடரும்


தொடர்புக்கு : 

துளிர் மென்பொருள் நிறுவனம் ,

31 Aஜீவன் நகர்ஆதம்பாக்கம்,
சென்னை – 88.

+91 89391 08274

info@thulirsoft.com


முகநூலில் விளம்பரங்கள் செய்யலாமா?

facebook3
முகநூல் என்று அழைக்கப்படும் Facebook-ஐ பயன்படுத்தாத இளைஞர்களே இல்லை என்று ஆகிவிட்டது. இந்தியா முழுக்க அனைத்து வயதினரும் முகநூல் கணக்கு துவங்கி தங்களது நண்பர்களுடன் இணைந்து உறவாடி தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். செய்திகளை அறிந்து கொள்வதற்கும் கேளிக்கைக்கும், பொழுதுபோக்கிற்கும் பயன்படும் முக்கிய ஊடகமாக முகநூல் ஆகிவிட்டது. தினசரி சில மணி நேரங்கள் வரை முகநூலில் தமது நேரத்தை செலவு செய்யும் நபர்கள் அனேகம். இவ்வாறு ஒரு ஊடகம் புகழ்பெறுகிறது என்றால் வணிகர்களும் வியாபாரிகளும் தங்களுடைய பொருள் விற்பனைக்கு அந்த ஊடகத்தில் விளம்பரம் செய்ய முயற்சிப்பார்கள். அந்த வகையில் முகநூல் நிறுவனமே விளம்பரம் செய்வதற்கு ஏராளமான வசதிகளை செய்து தந்துள்ளது.
முகநூலில் வரிகள், படங்கள், காணொளிகள் என்று மூன்று வகையான உள்ளீடுகள் பயனர்களால் செலுத்தப்படுகிறது. மேலும் தனிநபர், குழு, பக்கம் என்று மூன்று வகையான கணக்குகள் முகநூலில் இயங்குகிறது. இவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால் எந்த ஒரு நிறுவனமும் தங்களது பொருட்களை சிறப்பாக விளம்பரம் செய்து முகநூல் ஊடகத்தைக் கொண்டு பயன்பெறலாம். முகநூலில் என்னென்ன வகையான விளம்பரங்கள் செய்வதற்கு வசதிகள் உள்ளன என்று பார்ப்போம்.
கீழ்காணும் விடயங்களை முகநூலில் பணம் செலுத்தி விளம்பரப்படுத்தலாம்.
  1. செய்திகள், படங்கள், காணொளிகள் (Post)
  2. முகநூல் பக்கம் (Facebook Page)
  3. இணையதளம் (Websites)
  4. நிகழ்வுகள் (Events)
  5. அலைபேசி செயலிகள் (Mobile apps)
மேலே சொல்லப்பட்ட ஒவ்வொன்றுக்கும் விளம்பரம் செய்ய வழிமுறைகள் வேறுவேறாக உள்ளன. அவற்றைப் பின்பற்றி செய்துவிட்டு கடன்அட்டை மூலமாக முகநூல் நிறுவனத்திற்கு பணத்தை செலுத்தி விடலாம். எத்தனை பேருக்கு விளம்பரம் சென்று சேர்ந்திருக்கின்றது, அதில் எத்தனை பேர் சுட்டியை அழுத்தி ஆர்வத்துடன் பார்த்தனர், எவ்வளவு பணம் செலவாகியிருக்கிறது, செலவுக்கான நுண்ணிய விபரங்கள் போன்றவை முகநூல் நிறுவனத்தால் தெளிவாக விளம்பரம் செய்பவருக்கு தரப்படுகிறது. இணையத்தின் பயன்பாடு அதிகம் இருக்கக்கூடிய நகரங்களில் முகநூல் விளம்பரம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.
அடிப்படையாக முகநூல் என்பது புகைப்படங்கள் சார்ந்த ஊடகம் என்பதால் படங்களை விளம்பரத்துக்கு பயன்படுத்தும் எந்த ஒரு நிறுவனமும் முகநூல் விளம்பரங்களை தமது வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். உதாரணமாக நகைக்கடைகள், துணிக்கடைகள், அழகுசாதனங்கள் போன்ற பொருட்களை விற்கும் நிறுவனங்கள் எளிதாக தமது புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டு பரப்புரை செய்யலாம். சிறந்த பொருட்களின் அழகிய படங்களை எடுத்து முகநூல் நிறுவனத்திற்கு விளம்பரக் கட்டணம் செலுத்தி மக்களிடையே பரப்புரை செய்யலாம். முக்கியமாக முகநூலில் விளம்பரம் செய்யும் கட்டணம் தற்போது மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் அதிக விழிப்புணர்ச்சி இல்லாததனால் கட்டணங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. இதனைப் பயன்படுத்தி ஏராளமான நிறுவனங்கள் மக்களிடையே பொருட்களை கொண்டு சேர்த்து வருகின்றன. சிறு நிறுவனங்கள் தனிநபர்கள் போன்றோர் கூட குறைந்த பட்சம் நூறு ரூபாய் செலவிலேயே தமது விளம்பரங்களை துவக்கலாம்.
இத்தகைய விளம்பரங்கள் எத்தனை நாட்கள் செய்யப்படவேண்டும், ஒரு நாளுக்கு உச்சபட்ச விளம்பர செலவுத்தொகை, எந்த பாலினத்திற்கு விளம்பரம் காட்டப்படவேண்டும், எந்த வயதினருக்கு காட்டப்படவேண்டும், எத்தகைய ஆர்வம் கொண்டோருக்கு காட்டப்படவேண்டும், எந்த நகரத்தில் மட்டும் காட்டப்படவேண்டும் என்றெல்லாம் தனித்தனியாக உள்ளீடு செய்வதற்கு முகநூலில் வசதிகள் உள்ளன. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்களை கொண்டு சேர்க்க முடியும். முகநூலை கணிணியில் மட்டும் பார்ப்பவர்களுக்கென்று விளம்பரம் செய்ய இயலும், அதே போல அலைபேசியில் பார்ப்பவர்களுக்கும் அல்லது இருவருக்கும் விளம்பரம் செய்யமுடியும். இவ்வாறு எளிமையான வகையில் ஏராளமான வசதிகள் முகநூல் நிறுவனத்தால் செய்யப்பட்டிருக்கின்றன.
தமக்கு இவ்வகை விளம்பரம் உகந்ததா என்று ஆய்வு செய்து நிறுவனங்கள் இவ்வசதியை பயன்படுத்தி வளர்ச்சி பெறலாம். வரும் கட்டுரைகளில் மேலும் விரிவாக விளம்பரம் செய்யும் முறைகளையும் உத்திகளையும் பார்க்கலாம்.

முகநூல் விளம்பரம், சமூக ஊடகம் ஆகியவற்றினூடான சந்தைப்படுத்தல் (SEM) மற்றும் தேடல் பொறி மேம்படுத்தல் (SEO)  போன்ற, இணைய தள சேவைகளை உங்களுக்கு வழங்குகிறோம். 

தொடர்புக்கு : 

துளிர் மென்பொருள் நிறுவனம் ,

31 Aஜீவன் நகர், ஆதம்பாக்கம்,
சென்னை – 88.

+91 89391 08274

info@thulirsoft.com