ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட அலைபேசிகள் வெளியான பிறகு, உலகம் முழுவதும் அத்தகைய அலைபேசிப் பயன்பாடு அதிகரித்துவிட்டது. கைக்கு அடக்கமாக இருக்கும் கணினி போல அவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அருமையான சாதனத்தைக் கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ளமுடியும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம். அந்த முயற்சிக்கு உறுதுணையாக ஆன்டிராய்டு செயலிகள் விளங்குகின்றன. இப்பொழுது புத்தகங்களை நாம் அலைபேசி செயலிகளாகவே வெளியிட்டுவிடலாம்.
இணையத்தில் ஏராளமான புத்தகங்கள், செயலிகளாகவே கிடைக்கின்றன. எழுத்தாளர் ஒருவர் தமது புத்தகத்தை இணையத்தில் மட்டும் வெளியிட விரும்பினால், நல்ல ஒரு மென்பொருள் நிபுணரிடம், எழுதி தட்டச்சு செய்து புத்தகத்தை தந்துவிட்டாலே போதும். அருமையான முகப்பு அட்டை, உள்ளடக்கம் மற்றும் புத்தகத்தை செயலியாகவே அவர் உருவாக்கி இணையத்தில் ஏற்றிவிட முடியும். இத்தகைய புத்தகங்களுக்கு குறிப்பிட்ட விலையையும் நிர்ணயிக்கலாம். வாங்கும் வாசகர் கட்டணத்தைக் கட்டிவிட்டு தமது அலைபேசியில் புத்தக செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன்பின் வாசகர் எந்த நேரமானாலும் அதனைப் படித்து மகிழலாம்.
புத்தகம் என்பது செயலியாக மாறி அலைபேசிக்குள் இருப்பதால் தூக்கிக்கொண்டு அலைவது போன்ற சிரமங்கள் இல்லை. புத்தகம் தொலையவும் தொலையாது. இத்தகைய புத்தகங்களில் காணொலிகள், படங்கள் போன்றவற்றையும் எளிமையாக சேர்க்கலாம். கணினி மயமாகி வரும் இன்றைய நாளில் அலைபேசிக்குள்ளாகவே அனைத்தையும் அடக்கிவிட முடியும் எனும்பொழுது அங்கே புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. ஆகையால் இந்த உத்தியைப் பயன்படுத்தி நிறைய புத்தகங்கள் தமிழில் வெளிவரவேண்டும், அவற்றை வாசகர்கள் வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.
தொடர்புக்கு :
துளிர் மென்பொருள் நிறுவனம் ,
31 A, ஜீவன் நகர் 3வது தெரு,
ஆதம்பாக்கம், சென்னை – 88.
ஆதம்பாக்கம், சென்னை – 88.
+91 89391 08274 / 044 - 4269 8174
info@thulirsoft.com
No comments:
Post a Comment